சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி - உற்சாக வரவேற்பு
Thu, 28 Jul 20221659009465595

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக அகமதாபாத்தில் இருந்து தனி விமான மூலம் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் விமான தளத்திற்கு செல்லும் அவர், கார் மூலம் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு செல்கிறார். செஸ் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்று விட்டு பின்னர் ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் செல்கிறார். ஆளுநர் மாளிகையில் இரவு தங்கும் பிரதமர் நாளை காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவுள்ளார். பட்டப்படிப்பு விழா முடிந்த பிறகு சென்னை விமான நிலையம் செல்லும் பிரதமர் அங்கிருந்து அகமதாபாத் செல்ல திட்டமிட்டுள்ளார்.