ஆடி கிருத்திகை - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து

 
modi

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார் 

முருகனுக்கு மிகவும் உகந்த நாளான ஆடி கிருத்திகை தமிழகம் முழுவதும்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தமிழ் மாதங்களிலும் கிருத்திகை நட்சத்திரம் வந்தாலும், ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் கிருத்திகை நட்சத்திரம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் முருகன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஆறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல் சிறிய மற்றும் புகழ்பெற்ற முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. 


இந்நிலையில், பிரதமர் மோடி ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஆடிக்கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும். என குறிப்பிட்டுள்ளார்.