கேயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை இருமடங்கு உயர்வு

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் பிரதானமான மார்க்கெட்டாக கோயம்பேடு மார்க்கெட் விளங்குகிறது. இங்கிருந்து தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காய்கறி சப்ளை செய்யப்படுகிறது. காய்கறி வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவதும், வரத்து குறையும் போது விலை அதிகரிப்பதும் வாடிக்கையான ஒன்றுதான் இந்நிலையில், வெளிமாநிலங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமாக 450க்கும் மேற்பட்ட லாரிகள் வந்த இடத்தில் 360 லாரிகள் மட்டுமே வருகின்றன. இதனால் காய்கறிகள் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக கேரட், பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 2 மடங்காக அதிகரித்து உள்ளது. அதேபோல் கத்தரிக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்து உள்ளது. தக்காளி கிலோ 35 ரூபாய்க்கும், நாசிக் வெங்காயம் 22 ரூபாய்க்கும், ஆந்திரா வெங்காயம் 12 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 45 ரூபாய்க்கும், உஜாலா கத்தரிக்காய் 25 ரூபாய்க்கும், வரி கத்தரிக்காய் 15 ரூபாய்க்கும், அவரைக்காய் 60 ரூபாய்க்கும், , பச்சை பட்டாணி150 ரூபாய்க்கும், , வெண்டைக்காய் 20ரூபாய்க்கும், , பீட்ரூட் 30 ரூபாய்க்கும், , முட்டை கோஸ் 8ரூபாய்க்கும், , முருங்கைக்காய் 60 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.