தலைவர் தினம் - தமிழகம் இன்னும் காத்திருக்கு தலைவா..

 
r

கண்ணிமைக்கும் நொடியில் ஒரு மாற்றம் இருக்கு.. தமிழகமே இன்னும் காத்திருக்கு தலைவா என்று ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளனர் .  அந்த போஸ்டரில் 12. 12 தலைவர் தினம் என்று அச்சிட்டுள்ளனர். 

po

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அன்று வருகிறது.  இதை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.   இந்த போஸ்டரில் கண்ணிமைக்கும் நொடியில் மாற்றம் இருக்கு தமிழகம் இன்னும் காத்திருக்கு தலைவா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளன.

 ரஜினியை மீண்டும் அரசியலுக்கு அழைக்கின்ற வகையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.   திண்டுக்கல் நகரம் முழுவதும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இனி அரசியலுக்கு வரவே மாட்டேன்  தனி கட்சி தொடங்க மாட்டேன் என்று ரஜினி உறுதியாக அறிவித்த பின்னரும் கூட தமிழகம் இன்னும் காத்திருக்கு தலைவா என்று அவரது ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டி வருவது திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது