“தேமுதிக வேட்பாளரை ஆதரிக்க அதிமுக, பாஜக, தமாகா முன்வந்தால் வரவேற்போம்!” - பிரேமலதா விஜயகாந்த்

 
premalatha

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தேசிய முற்போக்கு திராவிட கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கட்சி தலைமை கழகத்தில் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையிலும் கழக முன்னணி நிர்வாகிகள் இளங்கோவன் மோகன்ராஜ் எல் கே சுதீஷ் பார்த்தசாரதி அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. கழக துணைச் செயலாளர் எல் கே சுதீஷ் அவர்கள் கட்சி சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தி மற்ற கட்சியுடன் ஆதரவு கேட்டு முரசு சின்னத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்றும் ஈரோடு தேர்தல் களத்தில் சந்திக்கலாம் என்றும் கழக துணைச் செயலாளர் எல் கே சுதீஷ் கூறினார்

மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தோடு கூட்டணி வைக்காத காரணத்தினால் தான் அதிமுகவிற்கு தற்போதைய நிலையில் நான்காக பிரிந்து இருக்கிறது.தனியாக களத்தில் இறங்கும் நாங்கள் மற்ற கட்சிகளிடம் ஆதரவு கேட்போம் ,தேமுதிக நிச்சயம் வெற்றி பெறும்.எப்பொழுதும் கிங்மேக்கர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தான். தேமுதிக வேட்பாளரை ஆதரிக்க அதிமுக, பாஜக, தமாகா முன்வந்தால் வரவேற்போம். ஈபிஎஸ், ஓபிஎஸ், அண்ணாமலை ஆகியோர் எங்களை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். இன்றைய அரசியல் சூழலில் தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை.  ஈபிஎஸ், ஓபிஎஸ், ஜி கே வாசன் போன்ற பல கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்போம்

25,000 ஓட்டுகளை கண்டிப்பாக இடை தேர்தலில் பெற வேண்டும் இதுதான் நமது இலக்கு. பாராளுமன்றத் தேர்தலுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஒரு முன்னோடியாக நாம் எடுத்து களத்தில் நின்று ஜெயித்து காட்டுவோம். உலகமே ஒருவரை நல்லவர் என்று சொல்கிறார்கள் என்றால் அது நமது கேப்டன் மட்டும்தான். தேமுதிக கட்சி பலத்தை நிரூபிக்க தனியாக களம் காண்கிறது” எனக் கூறினார்.