வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் தனியே தேர்தலை சந்திக்க நாங்க தயார்; மற்ற கட்சிகள் தயாரா?- பிரேமலதா

 
premalatha

பேசுறதிலும், நடப்பதிலும் தான் தலைவர் தோய்வு, ஆனால் நன்றாக இருக்கார். வரவேண்டிய நேரத்தில் தலைவர்விஜயகாந்த் வருவார் தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

No people's mandate for EPS to be CM: Premalatha || No people's mandate for  EPS to be CM: Premalatha

தேமுதிக கட்சி தொடங்கி 18 ஆம் ஆண்டு துவக்க விழா தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள், விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று மாலை மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மடிக்கணினி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “பேசுறதிலும், நடப்பதிலும் தான் தலைவர் தோய்வு. ஆனால் நல்லா இருக்கார். வரவேண்டிய நேரத்தில் தலைவர் விஜயகாந்த் வருவார். நான் காசுக்காக ஆசைப்பட்டவர் இல்லை. இன்று தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் தேர்தலில் வாக்காளர்களுக்கு காசு கொடுக்காமல் தனியே தேர்தலை சந்திக்க தயார் மற்ற கட்சிகள் தயாரா? கடவுள் அருள் இருந்தால் கேப்டன் வெளியே வருவார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ஏன் லஞ்ச ஒழிப்பு போலிசை வைத்து ரைடு செய்யுறிங்க தமிழக முதல்வரே? அவர்கள் யோக்கியர்கள் என்று நான் சொல்லவில்லை. திமுக ஆட்சி வந்துஇதுவரை ஒரு தடுப்பு அணைக்கூட கட்டவில்லை. ஆட்சி மாறியும், காட்சிகள் மாறவில்லை” எனக் கூறினார்.