தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தம்

 
Thermal plant

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுபாடு காரனமாக மீண்டும் 3-யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5-யூனிடகள் மூலம் நாள் ஒன்றுக்கு 210 மெகாவாட் வீதம்  1050 மெகாவாட் மின் உற்பத்தி தயாரிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிகக்கரி தட்டுபாடு காரனமாக குறைவான யூனிட்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது வரும் நிலக்கரிகளை கொண்டு அனைத்து யூனிட்களையும் இயக்கம் செய்து வரும் நிலையில் நிலக்கரி தட்டுபாடு காரனமாக மீண்டும்  அனல்மின் நிலையத்துல் 3-4-5 ஆகிய மூன்று யூனிட்டுகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது இதனால்  630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

coal

தற்போது 1 மற்றும் 2  ஆகிய இரண்டு யூனிட்டுகள் மூலம் சுமார் 420 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் செய்யப்பட்டுகிறது. அனல் நிலையத்தில் சுமார் 30-ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு இருந்தும் 3-யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் காரணம் என்னவென்றால் நிலக்கரி தட்டுபாடு காரணமாகவும் தற்போது இருக்கும் கையிருப்பு நிலக்கரியினை கொண்டு 2-யூனிகள் மட்டுமே இயக்க முடியும் என்றும், இன்னும் இரண்டு நாட்களில் கப்பல் மூலம் நிலக்கரி கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், நிலக்கரி வந்தடைந்ததும் மீண்டும் 5 யுனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.