தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம் - இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!!

 
tn

தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு  புனிதர் பட்டம் வாடிகனில் இன்று நடைபெறுகிறது.

 தேவசகாயம் பிள்ளை ஏப்ரல் 27ஆம் தேதி  1712 ஆண்டு பிறந்தவர். கிறித்தவர்களால் மறைசாட்சியாக போற்றப்படும் கன்னியாகுமரியை சேர்ந்த இவரின் இயற்பெயர் நீலகண்டன் . கிறித்துவ மதத்தை தழுவிய இவர் தனது  பெயரை தேவசகாயம் என்று மாற்றி கொண்டார். உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் அரசரின் கட்டளையை மீறி மதம் மாறியதால் இவர் கொலை செய்யப்பட்டார்.  கத்தோலிக்க திருச்சபை இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

tn

இந்நிலையில் மறைசாட்சி தேவசகாயத்திற்கு  புனிதர் பட்டம் வாடிகனில் இன்று நடைபெறுகிறது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது.  இதில் தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,  அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இத்தாலியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

tn

இதை தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு , இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து!  இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைபடுத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார். கன்னியாகுமரியை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்திற்கு இன்று பிற்பகல் நடைபெறும் விழாவில் புனிதர் பட்டம் போப் பிரான்சிஸால்    வழங்கப்படவுள்ளது. தமிழகத்திலிருந்து புனிதர் பட்டம் பெறும் முதல் நபர் தேவசகாயம் என்பது குறிப்பிடத்தக்கது.