கமல், ரஜினி முன்னிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை, டிரைய்லர் வெளியீடு

 
kamal and rajini

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைய்லர் வெளியீடு ரஜினி மற்றும் கமல் முன்னிலையில் நடைபெற உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசை கச்சேரியை நடத்த உள்ளார்.

The Rajini-Kamal dynamic: Rivals yet friends in cinema and politics | The  News Minute

இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புள்ள பத்திரிகைத் துறை , தொலைக்காட்சி , வானொலி , இணைய நண்பர்களே . திரு , மணி ரத்னம் அவர்கள் இயக்கத்தில் , லைகா புரொடக்ஷன்ஸ் திரு . சுபாஸ்கரன் அவர்கள் வழங்கும் , " பொன்னியின் செல்வன் பாகம் -1 " திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா , வரும் செப்டம்பர் 6 , 2022 மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது . MADRAS TALKIES இந்தியத் திரையுலகின் இரு பெரும் தூண்களான திரு . கமல்ஹாசன் அவர்கள் மற்றும் திரு . ரஜினிகாந்த் அவர்கள் ஆகியோரின் முன்னிலையில் , இசை மேதை திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் " பொன்னியின் செல்வன் பாகம் -1 " திரைப்படத்தின் பாடல்களை தனது இசைக்குழுவோடு சேர்ந்து அரங்கேற்றுகிறார் . இசை நிகழ்ச்சியோடு இணைந்து நம் திரையுலகின் மூத்த கலைஞர்களும் , தயாரிப்பாளர்களும் , இயக்குனர்களும் , விநியோகஸ்தர்களும் , நம் படத்தின் நட்சத்திரங்களும் , தொழில் நுட்பக் கலைஞர்களும் தமது நல்வாழ்த்துக்களை வழங்குவார்கள் . இந்த இனிய நிகழ்வில் நீங்கள் கலந்துகொண்டு உங்கள் வாழ்த்துக்களை வழங்கி சிறப்பிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . " பொன்னியின் செல்வன் பாகம் -1 " செப்டம்பர் 30 - ஆம் தேதி அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் தமிழ் , ஹிந்தி , தெலுங்கு , மலையாளம் , மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.