இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 
BUS

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

bus

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட செல்வது வழக்கம்.  இதற்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 14ஆம் தேதி வரையிலும்,  பயணிகள் மீண்டும் ஊர் திரும்ப வருகிற 18-ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரையிலும் சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

bus

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல இன்று முதல் மூன்று நாட்களுக்கு 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  கோயம்பேடு, கேகே நகர், மாதவரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த 6 பேருந்து நிறுத்தங்களுக்கு செல்ல 340 இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.