பொங்கல் பண்டிகை - இதுவரை 1.40 லட்சம் பேர் முன்பதிவு!!

 
tn

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இதுவரை 1.40 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.


BUS

பொங்கல் பண்டிகை ஒட்டி தமிழக முழுவதும் இன்று முதல் 12 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் சென்னையிலிருந்து 651 சிறப்புபேருந்துகளும் மற்ற பகுதிகளில் இருந்து 1508 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.  இப்போது சென்னையில் இருந்து செல்ல 14,500 பெரும் மற்ற பகுதிகளில் இருந்து 21,000 பேரும் முன்பதிவு செய்துள்ளனர். ஜனவரி இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள இதுவரை சுமார் 1.40 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

bus

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகர் மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் ,தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் ,பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.