பொங்கல் சிறப்பு ரயில்: இன்று முன்பதிவு

 
train

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ள நிலையில் இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

train

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி தாம்பரம் - நெல்லை இடையை இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. ஜனவரி 14ஆம் தேதி சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கும் , ஜனவரி 18ஆம் தேதி நெல்லையிலிருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

train

ஜனவரி 14-ம் தேதி இரவு 10:20 மணிக்கு சென்னை தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்புரையில் மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்று அடையும்.  ஜனவரி 18ஆம் தேதி மாலை 5:50 மணிக்கு நெல்லை சந்திப்பில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்  மறுநாள் அதிகாலை 4.10  மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும். சிறப்பு ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி ,திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ,கோவில்பட்டி வழியாக நெல்லை செல்கிறது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.