பொங்கல் பண்டிகை - இதுவரை 1.62 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு

 
BUS

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 1.62 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர்.

bus

பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதன் பிறகு பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவோரின் வசதிக்காக தமிழகம் முழுவதும் வருகிற 12-ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவதற்காக 15,619 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 முதல் 14ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும் 2,100 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் நிலையில் மூன்று நாட்களும் சேர்த்து 4449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

omni bus

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல  இதுவரை 1.62 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டம் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.  பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜனவரி 13, 14ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்படும் பேருந்துகளில் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.