இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்!

 
tn

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் இன்று  முதல் வீடு வீடாக வழங்கப்படுகிறது.

pongal

பொங்கல் பண்டிகையின் போது அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசினால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.   அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 அரிசி குடும்ப அட்டைதாரர்கள்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 33 ஆயிரத்து 342 பயனாளிகளுக்கு தலா  ஆயிரம் ரொக்கம் , ஒரு கிலோ பச்சரிசி , ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதற்காக ரூபாய் 2357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ttn

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான டோக்கன்கள் இன்று முதல் 8ம் தேதி வரை நியாய விலை கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  எந்த நாளில், எந்த நேரத்தில் கடைக்கு வர வேண்டும் என்பதை டோக்கனில் குறிப்பிட்டிருக்கும். பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கலை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 9ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.