பொள்ளாச்சி பாலியல் வழக்கு செய்திகளை வெளியிட தடை! முகம், அடையாளங்களை மறைத்து கூட வெளியிட தடை

 
pc

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான செய்திகளை வெளியிட பத்திரிகை, ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.  பாதிக்கப்பட்டவர்கள், அவரது உறவினர்கள் ஆகியோரின் முகம் மற்றும் அடையாளங்களை மறைத்து கூட பத்திரிகை , காட்சி ஊடகங்களில் செய்தி வெளியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.    சென்னை உயர்நீதிமன்ற இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

 கடந்த 2019 ஆம் ஆண்டில் பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டில் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.    இந்த சம்பவம் குறித்து அனைத்து தரப்பு ஊடகங்களின் செய்திகள் வெளியாகி இந்த நிலையில் ,  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சாட்சிகளின் அடையாளங்களை மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்தியதாக ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

hr

 சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது .   வாரம் இருமுறை வெளியாகும் தனியார் பத்திரிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பகிரங்கமாக பொது வெளியில் அம்பலப்படுத்தப்பட்டதாகவும்,  இந்த பிரதிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி , அந்த பத்திரிக்கையில் செய்தி வெளியாகி  மக்களை அது சென்றடைந்துவிட்ட நிலையில் பிரதிகளை திரும்ப பெறுவதில் பிரயோசனமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.   ஆனாலும்,  இந்த வழக்கில் அந்த பத்திரிகையை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி,   விசாரணை செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 தொடர்ந்து இந்த வழக்கில் பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் குறித்த செய்திகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.  அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் அவரது உறவினர்கள் ஆகியோரையும் பத்திரிகை உள்ளது காட்சி ஊடகங்களில் முகம் அடையாளங்களை மறைத்து கூட செய்தி வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார் .  இந்த உத்தரவை  ஊடகங்கள் பின்பற்றப்பட வில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.