”நான் கட்டிய தாலியை நீயே கழட்டுவாய்”... காதல் மனைவி விவாகரத்து கேட்டதால் காவலர் தற்கொலை!

 
police

சென்னை காசிமேட்டில் ஐந்து ஆண்டுகளாக காதலித்து திருமணமாகி 5 மாதத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக விவாகரத்து கேட்ட மனைவிக்கு ஊர்க்காவல் படை வீரர் உருக்கமாக வீடியோ பதிவு செய்துவிட்டு வீட்டில் தற்கொலை செய்துகொண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

madhan

சென்னை ராயபுரம் எம்எஸ் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன்(25). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தற்பொழுது  தண்டையார்பேட்டையில் மூன்று காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக கடந்த நான்கு மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இவர் காசிமேடு புதிய அமராஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டு அப்பகுதியில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்துவந்தார்

 இந்நிலையில் கடந்த வாரம் தனது நண்பர்களுடன் பேசி விட்டு இரவு வீட்டிற்கு சென்ற மதனுக்கும் அவரது மனைவிக்கும் பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. வீட்டில் படுக்கை அறையில் தற்கொலை செய்து கொண்டதற்கு முன்பு மனைவி ஹேமலதா விவாகரத்து கேட்டதாகவும் அதைக் கொடுப்பதற்கு நான் இருக்க மாட்டேன் என்றும் என்னால் உன் படிப்பிற்கு எந்த பிரச்சினையும் இருக்காது  நீ தாய் வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம் நான் கட்டிய தாலி இன்னும் 12 மணி நேரத்தில் நீயே கழட்டி கொடுப்பாய் என்று உருக்கமாக வீடியோ பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு மதன் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து நீண்ட நேரமாக மதன் படுக்கை அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த ஹேமலதாவின் உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அவர் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது உடனடியாக அவரை மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மதன் உயிரிழந்தார்