முகிலனை குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார் - கரூர் பரபரப்பு

 
ம்ு

சமூக ஆர்வலர் முகிலனை கைது செய்த போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.   இதனால் கரூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

 கரூர் மாவட்டத்தில் குப்பம் கிராமம் அடுத்த காளிபாளையம் வெட்டுக்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்.    52 வயதான இவர் விவசாயி.    இவர் கருடம் காருடையாம்பாளையத்தில்  இருந்து குப்பம் செல்லும் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த தனியார் கிரஷருக்கு சொந்தமான மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியானார். 

ஜெ

 தகவல் அறிந்த க. பரமத்தி போலீசார் ஜெகநாதன் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வந்ததில் முன் விரோதம் காரணமாக நடந்திருக்கலாம்.   இது கொலைதான் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
அப்பகுதியில் இயங்கி வந்த கல்குவாரி  காலக்கெடு முடிந்தும் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து செயல்படுவதாக கூறி ஜெகநாதன் கனிம வளத்துறையினருக்கு புகார் கொடுத்து இருக்கிறார்.   இந்த புகாரின் பேரில்  கனிம வளத்துறை அதிகாரிகள் அந்த குவாரியை இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர்.

 இந்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்திருக்கிறது.   இந்த நிலையில் தான்  ஜெகநாதன் பைக்கில் சென்ற போது அவரை மினி வேன் மோதி உயிரிழக்க செய்து இருக்கிறது.    இதனால் கல்குவாரியை மூட காரணமாக இருந்ததால் அவரை லாரி மோதி கொலை செய்துவிட்டனர் என்று உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.   இதை அடுத்து கொலை வழக்கமாக பதிவு செய்யப்பட்டு கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் வேன் ஓட்டுநர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விவசாயி ஜெகநாதன் உடலை வாங்க மறுத்து உறவினர்களும் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இதில் சமூக ஆர்வலர் முகிலன் முன்னிட்டு பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   அப்போது மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

க்

 மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.   ஆனால் ஜெகநாதன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியும்,  அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.   இந்த கோரிக்கையை நிறைவேற்றினால்தான் விவசாயி ஜெகநாதன் உடலை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்வோம் என்று உறுதியாக கூறிவிட்டனர்.

 தொடர்ந்து நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தவர்கள் இன்று ஐந்தாவது நாளாக கரூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் உடலை எடுத்துச் செல்ல மறுப்பு தெரிவித்தார்கள் .  ஒரு கோடி ரூபாய் நிவாரணமும் அரசு வேலையும் வழங்கினால் மட்டுமே உடல் எடுத்துச் செல்லப்படும் என்று சமூக ஆர்வலர் முகிலன் உறுதியாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.   இதனால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை உணர்ந்த போலீசார்,   சமூக ஆர்வலர் முகிலனை கைது செய்து போலீஸ் வாகனத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.  அப்போது முகிலன் வர மறுத்ததால் அவரைக் குண்டு கட்டாக தூக்கிச் சென்றார்கள் .  அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.