திமுக பேச்சாளர் மீது வழக்குப்பதிய காவல்துறை பரிந்துரை

 
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறை பரிந்துரைத்துள்ளது. 


விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி,  “இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக்கொடுத்த எங்க முப்பாட்டன் டாக்டர் அம்பேத்கர் பெயரை சொல்லமாட்டேன் என ஆளுநர் கூறினால் அவரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு இருக்கிறது. நீ போடா காஷ்மீருக்கு நாங்களே தீவிரவாதிகளை அனுப்புறோம். அவன் உன்னை சுட்டுக்கொல்லட்டும். அவர் கவர்னர் என்றாலும் அவரை பேரவையில் ஓடவிட்டவர் மு.க.ஸ்டாலின்” எனக் கூறினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து அவதூறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநரின் துணை செயலாளர் பிரசன்ன ராமசாமி போலீசில் புகார் அளித்திருந்தார். 


இந்நிலையில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநரின் துணைச் செயலர் அளித்த புகாரின் பேரில், அவதூறு வழக்கு தொடர அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. விரைவில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.