கிரிப்டோ கரன்சி மூலம் ரூ.1.5 கோடியை இழந்த காவலர்கள்

 
கிரிப்டோ கரன்சி

சென்னையில் கிரிப்டோகரன்சி மோசடியில் இரண்டு காவலர்கள் சுமார் ரூபாய் 1.5 கோடி பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Bit fund mining investment company மற்றும் online  bitcoin trading ஆகிய நிறுவனங்கள் பெயரில் பல தவணைகளாக பணத்தைக் கட்டி ஒரு காவலர் ரூ.1.24 கோடியும் மற்றொரு காவலர் ரூ.20.67 லட்சமும் இழந்துள்ளனர்.

 காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சுற்றறிக்கையில், “பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய காவலர்களே இது போன்ற போலியான நிறுவனங்களை நம்பி பணத்தை இழந்துள்ளனர்.  சமீபகாலமாக கவர்ச்சி விளம்பரங்களை நம்பி  சில காவலர்கள் பணம் மற்றும் சேமிப்புகளை அதில் முதலீடு செய்து ஏமாந்து உயிரை மாய்த்து கொள்ளக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல் குடும்பங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே சமூக வலைதளங்கள் மூலம் கவர்ந்திழுக்கும் இதுபோன்ற மோசடி நிறுவனங்களை நம்பாமல் தங்களது ஊதியத்தை நியாயமான முறையில் வங்கியில் முதலீடு செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.