பிஜின் குட்டி சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

 
கொ

பிஜின் குட்டியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி,  ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் அடுத்தடுத்து விசாரணை  நடத்தியிருக்கும் நிலையில் பிஜின் குட்டியின் சகோதரர் மோசஸ் என்பவரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மறு விசாரணை தீவிரம் அடைந்து இருக்கிறது.  5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த மறு விசாரணை நடந்து வருகிறது.  இந்த மறு விசாரணையில் இதுவரைக்கும் 220க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஒட்

 கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்து வரும் இந்த விசாரணையில்  முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி இடம் கடந்த 15ஆம் தேதி விசாரணை நடத்தினர். அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.   அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி, அதிமுக வர்த்தக அணி பொறுப்பாளர் சஜீவன்,  அவரது சகோதரர் சிபி, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்,  ஆறு குட்டி உதவியாளர் நாராயணசாமி ஆகியோரிடம் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 3-வது நாளாக நேற்று விசாரணை நடந்தது.   ஒன்பது மணி நேரம்  மூன்றாவது நாள் விசாரணை நடந்திருக்கிறது .ஏப்ரல் 29,  30 ஆகிய தேதிகளில் பூங்குன்றனிடம் 18 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.  இந்த நிலையில்தான் மூன்றாவது நாளாக நேற்று  9  மணி நேரம் விசாரணை நடந்திருக்கிறது.    

இந்த நிலையில் கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் ஆறாவது நபரான பிஜின்குட்டி சகோதரர் மோசஸ் இடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மோசஸ் உடன் வந்திருக்கும் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசஸ் இடம் மோசஸ் இடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு இருக்கும் நிலையில் இன்று மீண்டும் அவரை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொடநாடு சம்பவத்தின்போது சோதனைச் சாவடியில் பிஜின் உள்ளிட்டோர் சிக்கியபோது மோசஸுடன் பேசினாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.