சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் குவிப்பு

 
admk office

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகதிற்கு, தொண்டர்கள்  செல்ல உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில்  கூடுதலாக 70 காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Security beefed up for AIADMK party office - The Hindu


சென்னையை அடுத்து வானகரத்தில் ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு அன்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் ஆனது. இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம்  விளைவிக்கும் விதமாக செயல்பட்டதால் காவல் துறை வருவாய் கோட்டாட்சியர்,வருவாய் வட்டாட்சியர்  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இதற்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்து காவல்துறை,ஓபிஎஸ்,இபிஎஸ்  என மூன்று தரப்பு வாதங்களுக்கு பிறகு இன்று பிற்பகல்  எடப்பாடி தரப்பினருக்கு அலுவலக சாவியை வழங்க வேண்டும் என உத்தரவிட்டதோடு, ஒரு மாத காலத்திற்கு தொண்டர்கள் அதிமுக அலுவலகத்திற்கு செல்ல தடை உத்தரவும் பிறப்பித்தது மேலும் அதிமுக அலுவலகத்திற்கு  காவல் துறை உரிய  பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தது. 

அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைத்ததற்கு பிறகாக கிழக்கு மண்டல இணை ஆணையர் பிரபாகரன் IPS, மயிலாப்பூர் துணை ஆணையாளர்  திஷா மிட்டல் IPS ஆகியோர் தலைமையில்  100 கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து அசம்பாவிதத்தை தடுப்பதற்காக கூடுதலாக 70 காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் 100 காவலர்களும், பகலில் 170 காவலர்கள் என பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.