கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த முன்னாள் அமைச்சர்

 
அமைச்சர் பாஸ்கரன்

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசிய முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்படுள்ளது. 

பாஜகவிடம் இருந்து விலக நேரம் பார்ப்பதாக பேசிய அமைச்சர் பாஸ்கரன் அடித்த  பல்டி!

சிவகங்கை சேர்ந்த தமிழ்நாடு யாதவ மகாசபை உயர் மட்டகுழு உறுப்பினர். கரு.சுப்ரமணியன் மற்றும் வைரமணி ஆகியோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முதல்வர் மற்றும்  அமைச்சர்களை அநாகரிகமாக வும் தரக்குறைவாகவும் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளனர். 

அந்தபுகாரில், கடந்த 02.11.2022 அன்று சிவகங்கை அரண்மனை முன்புள்ள  கலையரங்கில் அதிமுகவின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுகூட்டத்தில் பேசிய  அதிஅதிமுக வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்  வி.ஜி.பாஸ்கரன் , தமிழக முதல்வர் அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் மற்றும்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மின்வாரிய அமைச்சர் செந்தில்பாலஜி ஆகியோரை மிகவும் அருவறுக்கதக்க வகையில் பொதுவெளியில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியதாகவும் வன்மத்தை  தூண்டும் வகையில் ஆட்சிக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் அவதூறு பரப்பும் வகையிலும்  அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் பேசியுள்ளார். 

மேலும் பாஸ்கரன்  அமைச்சர் ஆக இருந்த போது இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கௌரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 15 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் பரப்பளவுள்ள சொத்தை அபகரித்து தனது உறவினர்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்ததையும்,  அஇஅதிமுக ஆட்சி காலத்தில் திருட்டுதனமாக மணல் கொள்ளைகளில் ஈடுபட்டதையும்  சுட்டி காட்டி முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது குற்ற வழக்கு பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க  கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.