பள்ளி மேலாண்மை குழுவினரிடம் பாஜகவினர் அராஜகம்! போலீசில் புகார்

 
annamalai

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  அருகே கோட்டையூர் வேலங்குடியில் உள்ள தஞ்சாவூர் அருணாசலம் செட்டியார் அரசு மேல்நிலை பள்ளியில் இன்று மாலை  அரசு விதிப்படி பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை பிருந்தா ரமணி உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழுவினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

பாஜக நிர்வாகியாக உள்ள பாண்டித்துரை என்பவர் மனைவி திவ்யா பேருராட்சி வார்டு உறுப்பினராக இருப்பதால் மேலாண்மை குழுவில் ஒரு உறுப்பினராக உள்ள நிலையில் அவர் கூட்டத்திற்கு தாமதமாக வந்துள்ளார். கூட்டம் முடிந்த போது கூட்டத்திற்கு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாத பாஜக மாநில இளைஞரணி துணை தலைவராக உள்ள பாண்டித்துரை அங்கு வந்து மேலாண்மை குழு உறுப்பினர்களை தரக்குறைவாக பேசி அடிக்கப் பாய்ந்து உங்களை எல்லாம் என்ன செய்கிறேன் பார் என ஆணவத்துடன் மிரட்டி சென்றுள்ளார். இதனால் ஆசிரியர்கள் மற்றும் மேலாண்மை குழுவினர் அச்சமடைந்த நிலையில்  அங்கு வந்திருந்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோலைமலை  பள்ளத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தார்

உடனடியாக அங்கு வந்த பள்ளத்தூர் காவல் ஆய்வாளர் விசாரனை மேற்கொண்டு புகாரை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து ஆசிரியர்கள்  கலைந்து சென்றனர். பாஜகவினர் பல்வேறு இடங்களில் அராஜகத்தில் ஈடுபட்டு சர்சையாகி வரும் நிலையில் பள்ளியில்  தகாத வார்தையால் திட்டி அடிக்க பாய்ந்த சம்பவத்தால் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர்.