பட்டப்பகலில் வங்கியில் கொள்ளை முயற்சி - துணிவு படம் பார்த்து கொள்ளையடிக்க வந்ததாக வாக்குமூலம்

 
bank robery

திண்டுக்கல் அருகே வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், துணிவு படம் பார்த்து கொள்ளையடிக்க வந்ததாக அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று வங்கி செயல்பட்டு கொண்டிருந்த போது திடீரென உள்ளே நுழைந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்க முயற்சி செய்துள்ளார். அந்த மர்ம நபர் கட்டிப்போட்டத்தை அவிழ்த்துவிட்டு வெளியே வந்த ஊழியர் ஒருவர் கூச்சலிட்ட நிலையில், உடனடியாக வங்கிக்கு விரைந்த பொதுமக்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசாஅரிடம் ஒப்படைத்தனர். 

போலீசார் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது அந்த இளைஞர் திண்டுக்கல் பூச்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அணில் ரகுமான் என்பதும்,  வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் துணிவு திரைப்படம் பார்த்து, அதில் வரும் காட்சிகளை போன்று வங்கியில் கொள்ளையடிக்க வந்ததாக கூறியுள்ளார். அந்த இளைஞர் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த இளைஞரை கைது செய்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.