அம்மாவின் சேலையில் பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை

 
se

பிளஸ் 2 மாணவர் தனது அம்மாவின் சேலையை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 விருதுநகரில் சூலக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன் , ஈஸ்வரி தம்பதியினர்.  முருகேசன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.    இவரின் மகன் தினேஷ்,  தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். 

di

 இந்த நிலையில் வெளியூர் சென்றிருந்த தினேஷின் தாத்தா வேலுச்சாமி இன்று காலையில் வீட்டிற்கு வந்து பேரனை பார்த்துவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.   இரண்டு மணி நேரம் கழித்து அவர் வீட்டிற்கு வந்த போது வீடு திறந்து கிடந்திருக்கிறது .  ஒரு அறை மட்டும்  உள்பக்கமாக பூட்டி இருந்திருக்கிறது.

 சந்தேகமடைந்த வேலுச்சாமி,  அருகில் இருந்தவர்களை அழைத்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது பேரன் தினேஷ் அந்த அறையில் தனது அம்மாவின் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதிருக்கிறார்.

 சம்பவம் குறித்து அறிந்த சூலக்கரை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

பிளஸ் டூ மாணவர் ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.