எதிர்வினையாற்றாதீர்கள்...பணியை செய்வோம் : உதயநிதி ஸ்டாலின்

 
Udhayanithi

திமுகவின் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்  பக்கம் நேற்று திடீரென செயல்படவில்லை.  ஆனால் பாஜக ஆதரவாளர்களோ திமுகவின்  ஐடி விங் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர் . ஒரு மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் திமுகவின் ஐடி விங் ட்விட்டர் பக்கம் செயல்பட தொடங்கிய நிலையில்,  மன்னார்குடி எம்எல்ஏவும் , திமுகவின் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் டி.ஆர்.பி.  ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்து இருந்தார்.

dmk

அதில், சந்தான பாரதிக்கும் அமித் ஷாவுக்கும் வித்தியாசம் தெரியாத சங்கி மந்திகளுக்கு தொழில் நுட்ப கோளாறுக்கும், முடக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதது விந்தை இல்லை.  புதிய சிஸ்டம் இடம் பெயர்வின் போது, சிறிய தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது . டிவிட்டர் நிறுவனத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். விரைவில் பிரச்னை சரிசெய்யப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.


இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏ வுமான  உதயநிதி ஸ்டாலின், தயவு செய்து பதில் சொல்லாதீர்கள்.  அரசியல் பிம்பங்களுக்கு எதிர்வினையாற்றாதீர்கள். அவற்றைப் புறக்கணித்துவிட்டு நம் வேலையைச் செய்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.