தயவு செய்து உங்கள் மகன்களிடம் பேசுங்கள்.. ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் - பாடகி சின்மயி உருக்கம்

 
c

ஆண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய பொய் என்கிறார் திரைப்பட பின்னணி பாடகி சின்மயி.  அவர் மேலும்,  பெண் குழந்தைகளைப் போலவே ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்.  அதனால் தயவு செய்து உங்கள் மகன்களிடம் பேசுங்கள்.  அவர்கள் பள்ளியில் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை கவனியுங்கள் என்று உருக்கமுடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 சென்னை அசோக் நகர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும்  மாணவருக்கு ஏற்பட்ட நிலைமையை அடுத்து பாடகி சின்மயி இந்த பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.   இது குறித்து சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில்,   ’’சென்னை அசோக் நகர் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள் கடந்த சில மாதங்களாக சக மாணவரை தொடர்ந்து கொடுமைப்படுத்தியும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் வந்திருக்கிறார்கள். 

ச்ச்

 உடல் ரீதியாக மனரீதியாக அந்த மாணவர் வன்முறையை அனுபவித்து வந்திருக்கிறார்.  சிறுவனை கழிவறைக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி இருக்கிறார்கள். பிறப்புறுப்பில் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று தள்ளி விடுவதாக மிரட்டி இருக்கிறார்கள்.  தங்களைப் பற்றி யாரிடமாவது புகார் சொன்னால் உன்னையும் உன் பெற்றோரையும் கொன்று விடுவோம்.  எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்று சொல்லி மிரட்டி இருக்கிறார்கள்.

சிறுவன் தனக்கு நேர்ந்ததை தாயிடம் சொல்ல,  அந்த தாய்   பள்ளிக்குச் சென்று அந்த மாணவர்களை சந்தித்து பிரச்சனை ஏதும் இல்லாமல் தன் மகன் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று ,  அந்த நான்கு மாணவர்களின் காலில் விழுந்து பையனை  தொந்தரவு செய்ய வேண்டாம் விட்டுவிடுங்கள்.. நண்பர்களாக இருந்து பழகுங்கள் என்று கெஞ்சி இருக்கிறார்.   அந்த நான்கு மாணவர்களும் அப்போது சரி என்று சொல்லி இருக்கிறார்கள் .  ஆனால் திரும்பவும் தங்கள் கோர முகத்தை காட்டி இருக்கிறார்கள். ஆபாச படத்தை பார்க்க வைத்திருக்கிறார்கள்.  தாயுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறேன் என்று அந்த மாணவரிடம் சொல்லி இருக்கிறார்கள்.  அந்த மாணவரின் பெற்றோர் உடலுறவு கொள்வதை பார்க்கச் சொல்லி கொடுமைப் படுத்தி இருக்கிறார்கள்.

வ்ஹ்

அந்தச் சிறுவன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்.  சிறுவனுக்கு வாந்தி, காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.   யாரைப் பார்த்தாலும் பயப்படும் நிலையில் இருக்கிறார்.  பத்தாம் வகுப்பு மாணவர்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா? என்று அதிர்ச்சி அளிக்கிறது.

 பாதிக்கப்பட்ட அந்த மாணவர் இதிலிருந்து வெளிவர எத்தனை வருடங்கள் ஆகும் என்று தெரியவில்லை. மீண்டும் வருவார் என்றும் நம்புகிறேன். அதற்காக பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று  உருக்கமுடன் சொல்லியிருக்கும் சின்மயி , 

ச்

‘’தயவுசெய்து உங்கள் மகன்களிடம் பேசுங்கள்.   அவர்கள் பாலியை பள்ளியில் பாதுகாப்பாக இருக்கிறார்களா? அவர்களின் நடத்தையில் மாற்றம் ஏதேனும் தெரிகிறதா? அவர்கள் எப்போதும் போல் இயல்பாக இருக்கிறார்களா? இல்லை அச்சத்துடன் இருக்கிறார்களா? என்பதை கவனித்துப்பாருங்கள் .  ஆண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நினைப்பது மிகப்பெரிய பொய்.  பெண் குழந்தைகளைப் போலவே தான் ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றார்கள்’’ என்று அறிவுறுத்தி இருக்கிறார்.