ப்ளீஸ் நிறுத்துங்கள்..வன்முறை அநீதிக்கு தீர்வாகாது - குஷ்பு

 
க்

ப்ளீஸ் நிறுத்துங்கள்..வன்முறை அநீதிக்கு தீர்வாகாது என்கிறார் குஷ்பூ. அவர் மேலும்,  நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பள்ளி விடுதியில் தங்கியிருந்து 12 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.   கடந்த ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்தது. 

ஃப்ஃப்

 ஆனால் தனது மகளின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக மாணவியின் தாயார் புகார் தெரிவித்து இருந்தார்.   அதற்கேற்றார் போல்  பிரதேச பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்களும் ஆடையில் ரத்த கரைகளும் இருந்துள்ளன என்று தெரிய வந்திருக்கிறது.   இதை அடுத்து சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மக்கள் திடீரென்று  போராட்டம் வன்முறையாக வெடிக்க துவங்கியது.

 மக்கள் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தி வந்ததால் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.  300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்க பட்டிருந்தனர்.  ஆனால் மக்கள் , மாணவ அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினரும் திரண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பேருந்துகளை தீ வைத்து எரித்து,  போலீஸ் வாகனத்தையும் தீ வைத்து எரித்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.

 போராட்டம் வன்முறையாக வெடித்ததால் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.  பதிலுக்கு போலீசார் மீது கற்களை வீசினர். போலீசாரம் தடியடைய நடத்தியுள்ளனர்.  நிலைமை விபரீதமாவது அறிந்து இந்த விவகாரத்தை விசாரிக்க சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. 

ச்

இத்தனை பிரச்சனைக்கும் காரணம் மாணவியின் தாயார் தான் என்று கல்லூரியின் செயலாளர் புகார் தெரிவித்திருக்கிறார்.   கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மீது நடந்த வன்முறையை கண்டித்து தனியார் பள்ளிகள் நாளை வேலை நிறுத்தம் என்று சங்கத் தனியார் பள்ளிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.  அப்படி பள்ளிகள் திறக்காமல் வேலை நிறுத்தம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்து இருக்கிறது.  இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் போராட்டக்காரர்களால் தொடர்ந்து பதற்றம் நிடித்து வருகிறது.

 இது குறித்து நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பூ,  ‘’ கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர்களால் சித்திரவதை செய்யப்பட்டதாக  குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.  இதில், இறுதிவரை ஆய்வு செய்ய வேண்டும். நீதியை நிலைநாட்ட நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்.  ஆனால் வன்முறை அநீதிக்கு தீர்வாகாது. ப்ளீஸ் நிறுத்துங்கள்’’ என்கிறார்.  அவர் மேலும்,  ‘’இந்த விவகாரத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’’ என்று போராட்டக்காரர்களுக்கு சொல்கிறார்.