செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை ஓடிடியில் வெளியிட திட்டம்

 
chess olympiad

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை ஓடிடி தளத்தில் வெளிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Chess Olympiad 2022: Third Indian Team Unaffected After Pakistan's  Withdrawal

ஆகஸ்ட் 8 ம் தேதிக்குள் ஒப்பந்தம் கோரலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28ஆம் தேதி சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. துவக்க நிகழ்ச்சியானது உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது . ஒலிம்பியாட் போட்டியினுடைய நிறைவு விழாவானது ஆகஸ்ட் 9 தேதி நடைபெற உள்ள  நிலையில், ஒலிம்பியாட் போட்டிக்கான  நிறைவு விழா நிகழ்ச்சியானது டிஜிட்டல் மற்றும் OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மற்றும் OTT தளத்தில்  ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.(05/08/2022) இன்று முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.