இன்றும் நாளையும் தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் இடங்கள்

 
i

தென்மேற்கு பருவமழை காலம் கடந்த 23ஆம் தேதியுடன் இந்திய பகுதிகளிலிருந்து விலகிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.  இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 45 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது  

வழக்கமாக தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் அதிக மழையை பெறும்.  வடகிழக்கு பருவ மழையை தமிழ்நாடு புதுச்சேரி எதிர்பார்த்து இருக்கின்றன.  

r

 அக்டோபர் மாதம் மூணாவது வார இறுதியில் அல்லது நாலாவது வாரத் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.   இந்த ஆண்டு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த புயலின் காரணமாக வட கிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.  வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த சிட்ரன் புயல் கரையை கடந்து விட்டதால் வடகிழக்கு பருவமழை வரும் 29ஆம் தேதி தமிழ்நாடு,  புதுச்சேரியில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

 இதனால் தமிழ்நாடு,  புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் இடி ,மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறது.  இதனால் விழுப்புரம் ,கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விருதுநகர், சிவகங்கை, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது .

 தமிழகப் பகுதிகளில் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியினால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் ஓரிடங்களிலும்,  நாளை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய இலேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.