இன்று முதல் பிங்க் பேருந்துகள் இயக்கம்: எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

 
 இன்று முதல் பிங்க் பேருந்துகள் இயக்க: எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்..

 

சென்னையில் இயங்கி வரும் மகளிர் கட்டணமில்லா பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் பிங்க் எனப்படும் இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த பிங்க் பேருந்துகள் இயக்கத்தை  எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது  திமுக தேர்தல் அறிக்கையில்,   அனைத்து மகளிருக்கும் மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,   ஆட்சிக்கு வந்தபின்னர் பணிபுரியும் பெண்கள்,  பள்ளி, கல்லூரி மாணவியர்கள் உள்பட அனைத்து பெண்களும்  சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்காக , தனியே  பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் பிங்க் பேருந்துகள் இயக்கம்: எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்..

 அந்த டிக்கெட்டில்,  மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவிகள்,  கூலி வேலைக்கு செல்லும் பெண்கள் உள்பட அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் வரை இந்த திட்டத்தின் கீழ்  நாடு முழுவதும்  லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து  வருகின்றனர். இருந்தபோதிலும், எது இலவச பேருந்து என்ற குழப்பம் மக்கள் மத்தியில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் சென்னை மாநகர பேருந்துகளில் வெள்ளை போர்டு, கிரீன் போர்டு, புளு போர்ட், டிஜிட்டல் என பல்வேறு விதமான பேருந்துகள் இயங்குகின்றன.  
  இன்று முதல் பிங்க் பேருந்துகள் இயக்கம்: எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்..
இதனால்  சாதாரண கட்டண பேருந்துகளை மகளிரால் அடையாளம் காண முடியாமல்,  மற்ற பேருந்துகளில் மாறி  ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை தவிர்க்க சாதாரண கட்டண பேருந்துகளை  எளிதில்  அடையாளம் காணும் வகையில் அந்தப்  பேருந்துகளின் முகப்பில் இளஞ்சிவப்பு ( பிங்க்)  வண்ணம் பூசப்படுகின்றது. முதல்கட்டமாக இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்ட 60  பேருந்துகளின் இயக்கத்தை  சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் , இன்று தொடங்கி வைத்தார். அண்ணா சதுக்கம்  பேருந்து நிலையத்தில் இருந்து  இந்த பேருந்துகள் பயன்பாட்டுக்கு வருகின்றன.