திருப்பதி மற்றும் தமிழக கோயில்களில் இன்று நடை சாத்தப்படும்

 
ம்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இன்று நடை சாத்தப்படுகிறது . அதேபோல் தமிழ்நாட்டிலும் ஸ்ரீரங்கம் கோயில் ,மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , ராமேஸ்வரம் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் நடை சாத்தப்படுகிறது.

டி

 திருப்பதியில் இன்று காலை 8:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது.   அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. அன்னதானம் வழங்குவதும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சு

 இதே போல் தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் அதன் 22 உப கோயில்களும் இன்று காலை ஒன்பது முப்பது மணி முதல் இரவு 7:30 மணி வரை நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.   

ச்

 சந்திர கிரகணத்தினை முன்னிட்டு திருச்சியில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நாளை காலை 6:45 மணி முதல் காலை 8 மணி வரையிலும் காலை 9 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட இருக்கின்றார்கள்.   ராமேஸ்வரம் கோயிலிலும் நண்பர்கள் ஒரு மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை சாத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.