பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு!

 
tn

கோவையில்  பாஜக அலுவலகத்தை தொடர்ந்து  பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

tn

 

கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகம் நேற்று இரவு 8:40 மணியளவில் இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர்.  இருப்பினும் நல்வாய்ப்பாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tn

இந்நிலையில் கோவை பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.பாஜக மாவட்ட செயலாளர் பொன்ராஜ், சிவா மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த சரவணன் ஆகியோரின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அத்துடன் 2 கார், 2 ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் துணை கண்காணிப்பாளர் தீபா சுஜிதா தலைமையிலான போலீஸ் குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.