கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு!!

 
tn

கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.  

ttn

கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் பாஜக மாவட்ட அலுவலகம் நேற்று இரவு 8:40 மணியளவில் இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர்.  இருப்பினும் நல்வாய்ப்பாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதையடுத்து பாஜக அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக இது குறித்து மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  பெட்ரோல் குண்டை  கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ttn
இதேபோல கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள லட்சுமணன் என்ற ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான மாருதி செலக்சன் என்ற துணிக்கடையின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.  பெட்ரோல் குண்டு வீசியதால்  துணிக்கடையில் தீ பற்றிக்கொண்டது.  இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொள்ள 5  தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில்  துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இவ்விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.