பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு- கோவையில் பரபரப்பு

 
Petrol bomb blast at the BJP office in Coimbatore

என்ஐஏ சோதனை, பாஜக மாவட்ட தலைவர் கைதால் கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பெட்ரோல்

சித்தாபுதூர் வி கே கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் அமைந்துள்ள சாலையில் டிரான்ஸ்ஃபாரம் அருகே மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றனர். ஜவுளி கடைகள் வணிக வளாகங்கள் நிறைந்திருக்கின்ற ஒப்பன்னக்கார வீதியில் ஒரு துணிக்கடை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக வெரைட்டி ஹால் போலிஸ் விசாரணை நடத்திவருகின்றனர். 

மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் ஏசி வின்சென்ட் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அசம்பாவிதத்தை நடத்த முயற்சி செய்தவர்களை பிடிப்பதற்கான பணி நடைபெற்றுவருகிறது. லாட்ஜில் தங்கி இருப்போர், இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக செல்வோர், சோதனை சாவடிகளில் போலீசார் தணிக்கையில் ஈடுபடுகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க கோவை சிட்டி முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்து இஸ்லாமிய வழிபாட்டு தளங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.