யானை வழித்தடங்கள் அடைப்பு; ஈஷா யோகா மையத்தின் மீது மனு தாக்கல்

 
Diwali celebration at isha

ஈஷா யோகா மையத்தால் யானை வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர் மனு தாக்கல் செய்துள்ளார்.

Isha Yoga Center, Coimbatore - Best time to visitIsha Yoga Center, Coimbatore - Best time to visit

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு  தொடரக் கூடாது என விளக்கம் கேட்டு  ஈஷா அறக்கட்டளைக்கு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  கடந்த ஆண்டு நவம்பர் 19 ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இதில்,சென்னையை சேர்ந்த வன விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர் முரளிதரன் என்பவர் தன்னையும் இந்த வழக்கில் சேர்க்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளை அமைந்துள்ள இடத்திற்கு அருகே யானைகள் தண்ணீர் தேடி வரும் இடமாகும், யானைகள் வழித்தடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் அவற்றை ஊருக்குள் வரும் அபாயம் ஏற்படுகிறது, இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் 150 க்கு மேற்பட்ட யானைகள் இறந்துள்ளது, மேலும் யானைகள் தாக்கியதில் சுமார் 160க்கு மேற்பட்ட மனிதர்கள் இறந்துள்ளனர் என்றும்,   இந்து உணர்வுகளை புண்படுத்தும் வகையில் டிஸ்கோ நடனம் நடத்தி, சினிமா நடிகர்கள் சிவராத்திரி இரவுகளில் திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.அதிக டெசிபல் ஒலியால் அப்பகுதியை மாசுபடுத்துவதாகவும் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

காடுகளில் இருந்து 100 மீட்டர் தொலைவில்  தினசரி ‘ஆதி யோகி’ லேசர் ஷோ நடத்தப்படுகிறது,எனவே ஈஷா அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள மனுவில் தங்களை எதிர்மனுதராக சேர்க்க கோரிக்கை வைத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு  விசாரணை வந்தது. வழக்கு விசாரணையை வரும் 28 ம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.