#JUSTIN கும்பக்கரை அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி!
கும்பக்கரை அருவியில் மீண்டும் குளிக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து இந்த அருவிக்கு நீர்வரத்து வரும் நிலையில், அப்பகுதி வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ச்சி அடைவர்.

இந்த சூழலில் கடந்த சில தினங்களாக கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகமானது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தேனி கும்பக்கரை அருவியில் நீர்வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சரியான பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறை தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


