புதுச்சேரியில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி!

 
thunivu and varisu

புதுச்சேரியில் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு திரைப்படம் நாளை வெளியாகிறது. இதற்காக இருவரும் நடித்த படத்திற்கும் இரவு 1:30 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் அருகே உள்ள முருகா தியேட்டரில் அஜித் நடித்த துணிவு விஜய் நடித்த வாரிசு இரண்டு படங்களும் திரையிடப்படுகிறது.

varisu vs thunivu

இந்நிலையில் புதுச்சேரியில் நாளை ஒருநாள் மட்டும் அதிகாலை 1 மணி காட்சிக்கும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை காலை 5 மணி காட்சிக்கும் அனுமதி தரப்பட்டுள்ளதாக ஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார். படங்களுக்கான டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே செய்யப்பட்ட நிலையில், படங்களை திரையிட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.


இதனிடையே புதுச்சேரி முருகா தியேட்டரில், விஜய் படம் மட்டும், நள்ளிரவு 1:30 மணிக்கு  திரையிடப்படும் என்று விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் முகமூடி அணிந்து கொண்டு தியேட்டரின் பின்புறமாக உள்ளே புகுந்து மணல் நிரப்பப்பட்ட தீ  வாளியை எடுத்து தியேட்டரில் முன்பக்க கண்ணாடி அடித்து நொறுக்கியதுடன் அஜித் படம் பொறிக்கப்பட்ட கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதனால் தியேட்டரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சி மூலம் தியேட்டருக்குள் புகுந்து ரகளை ஈடுபட்ட ரசிகர்களை வலை வீசி தேடி வருகின்றனர். படம் நாளை வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரியில் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு ரகளையை தொடங்கியுள்ளனர்.