மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் குறும்படங்கள் எடுக்க நிரந்தரமாக தடை!!

 
tn

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில், குறும்படங்கள் மற்றும் போட்டோ ஷூட் எடுக்க நிரந்தரமாக தடை விதித்து தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

tn

திருமலை நாயக்கர் அரண்மனை மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது.  தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில், இந்த அரண்மனையும் ஒன்றாகும். இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரம்மாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. 

tn

இந்நிலையில் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில், குறும்படங்கள்  எடுக்க நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு நிரந்தரமாக அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் போட்டோ ஷூட் ,புகைப்படம் ,வீடியோ எடுக்க பிளாஷ் லைட் அம்பார்லா லைட் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் குறும்படம்,  பெரும்படம் எடுக்க தடை விதித்து ஆணை பிறப்பிக்கப்பட்டு  அரசாணை வெளியிட்டுள்ளது. திருமலை நாயக்கர் மஹாலில் அனுமதி என்று குறும்படம் எடுக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தொல்லியல் துறை இவ்வாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.