பெரியார் பிறந்தநாள் - பாமக நிறுவனர் ராமதாஸ் மரியாதை!

 
tn

பெரியாரின் 144 பிறந்தநாளையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ்  அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

tn 

பெரியார் என்று பலராலும் அறியப்படும் ஈ.வெ. ராமசாமியின் 144 ஆவது பிறந்தநாள் இன்று சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடம் இருந்து களைவதற்காகவும் ,பெண் விடுதலைக்காகவும் போராடிய மாபெரும் தலைவர் பெரியார்.  திராவிட கழகத்தை தோற்றுவித்த இவர் சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு வாதம், தீண்டாமை, மூடநம்பிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.  சுயமரியாதை கொள்கைகள் , பகுத்தறிவு , தமிழ்நாட்டின் சமூக பரப்பிலும்,  தமிழக அரசியலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியதற்கு மிக முக்கிய காரணம் பெரியார். அதன் காரணமாகத்தான் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள் , மட்டமான பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று பலராலும் இவர் பாராட்டப்பட்டார்.

tn

இந்நிலையில் தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாளை ஒட்டி தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது ஜிகே மணி மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அறியாமை இருளை அகற்ற  வந்த  தந்தைப் பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளில்  அவரை வணங்குவோம்... போற்றுவோம். பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் கொள்கைகள் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியவை.  அவை தான் நமக்கு வழிகாட்டும் விளக்குகள். அவற்றின் வழியில் நாம் பயணிப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.