தந்தை பெரியார் 144வது பிறந்தநாள் - அமமுக சார்பில் மரியாதை!!

 
TTV

தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாளையொட்டி  தினகரன் மரியாதை செலுத்தவுள்ளார்.

ttn

இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பகுத்தறிவு பகலவன், சுயமரியாதை சுடரொளி, திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாள்17.09.2022 சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா சாலையில், அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள்.

ttv dhinakaran

இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் என அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.