“எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா” பரபரப்பு போஸ்டர்

 
போஸ்டர்

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சமூக நீதிக்கான நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 

ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம்! பெரியார் 144வது பிறந்தநாள் நாளை! கோலாகலமாக  கொண்டாடும் தமிழக அரசு! | Periyar 144th birth anniversary is celebrated  tomorrow - Tamil Oneindia

இதைத் தொடர்ந்து தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் கொண்டாடினர். முன்னதாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டத்திலும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற தமிழக அரசு அறிவித்ததை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி,ஸ்டாலின் புகைப்படங்களுடன் "எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பார்க்கலாம்" என்று சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டுள்ளது. கோவை பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் இந்த சுவரிட்டி பார்க்க முடிந்தது. அந்த சுவரொட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.