தந்தை பெரியார் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் ட்வீட்!!

 
tn

பெரியாரின் 144ஆவது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். 

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சுயமரியாதை சிந்தனையாளர்  தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்தநாளில்  அவரை வணங்கி போற்றுவோம்.  சமூகநீதிக் கொள்கையின் தலைமகன் அவர். அவர் வகுத்துக் கொடுத்த சமூகநீதிக் கொள்கையின் வழி நடந்து  மக்களின் மறுமலர்ச்சிக்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் பாடுபட இந்த நாளில்  உறுதியேற்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

tn

அதேபோல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் , மனிதன் என்பதற்கே பொருள் விஷயங்களை ஆராய்ந்து நன்மை தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும் என்ற தந்தை பெரியாரின் வாக்கினை பதிவிட்டு சமூகநீதி நாள் வாழ்த்தினை கூறியுள்ளார். 


அத்துடன் திமுக எம்.பி., கனிமொழி, " சுயமரியாதையும் சமூக நீதியும் வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்து காட்டிய தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி நாள் இன்று. பகுத்தறிவே மானுடத்தின் அடிப்படை மாண்பெனப் போதித்த அந்தப் பெருந்தகையின் லட்சியங்களை நிறைவேற்றிட உழைப்போம்."என்று பதிவிட்டுள்ளார். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சமநீதி, சிந்தனை, சீர்திருத்தம், சுயமரியாதை, செயலூக்கம் ஆகிய சொற்களுக்கு அருஞ்சொற்பொருளாக விளங்கியது பெரியார் என்ற பெயர். இறுதிவரைக்கும் எளியவர்கள் மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்கப் போராடிய ஈ.வெ.ராமசாமிப் பெரியாரை எண்ணி வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.