முக்காடு போட்ட எடப்பாடி பழனிசாமி

 
eps

மணப்பாறை அருகே அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மலர்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. 

திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடி அருகே திருச்சி தெற்கு மாவட்ட அதிமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக நூற்றுக்கணக்கான ஆண் பெண்கள் அங்கு காத்திருந்தனர். 

தாரை தப்பட்டை முழுங்க காரில் இருந்து இறங்கிய எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் புடை சூழ வரவேற்பு தந்து அழைத்துச் சென்றனர். அப்போது பெண்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த ரோஜா பூ மலர்களை அள்ளி வீச தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மீது விழுந்து கொண்டே இருந்த போது தனக்கு அணிவிக்கப்பட்ட பொன்னாடையை எடுத்து தலையில் முக்காடு போட்டு பின்னர் எடுத்து விட்டு நடந்து சென்றார். அப்போது அவரை அங்கிருந்தவர்கள் புடைசூல முண்டியடித்து கொண்டு செல்லவே மக்கள் கூட்டத்தில் முட்டி மோதி சென்றார். 

சுங்கச் சாவடியின் எடைமேடை மீது தரைவிரிப்பு விரித்து மேடையாக்கப்பட்டிருந்த நிலையில் அதன் மீது ஏறிய எடப்பாடி பழனிச்சாமி மாவட்டச் செயலாளர் குமாரை கடிந்து கொண்டார். பின்னர் பிரமாண்ட மாலையை கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு போட்டனர். அதன் பின்னர் மக்களை பார்த்து அவர் கையை அசைக்கவே மக்கள் கூட்டத்தில் இருந்த அனைவரும் ஒரே நேரத்தில் கைகளை உயர்த்தியதால் எங்கு திரும்பினும் கைகளாக காட்சி அளித்தது. இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.