மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.. - தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி பாராட்டு..

 
ks alagiri

போர்க்கால அடிப்படையில் முதல்வர் நடவடிக்கை எடுத்ததால்,  மழை பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி பாராட்டியுள்ளார்.  

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ,. “ தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை பெய்யும் என்பதை கடந்த கால அதிமுக ஆட்சியாளர்கள் உணராத காரணத்தால் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினால் நிகழ்ந்த உயிரிழப்புளும், பாதிப்புகளும் வார்த்தைகளால் வடிக்க இயலாது. அன்றைய அரசிடம் முறையான நீர் மேலாண்மை இல்லாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் கடந்த காலங்களில் ஏற்பட்டன.

சென்னை மழை

ஆனால், மிகுந்த நிதி நெருக்கடிக்கிடையில் முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்த காரணத்தால் தற்போது பெருமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 220 கி.மீ. நீளத்திற்கான மழைநீர் வடிகால் கட்டும் பணிகளில் 157 கி.மீ. தூரத்திற்கான பணிகள் முடிக்கப்பட்டதால் மக்கள் பாதிப்புகளிலிருந்து பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.