தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை கொண்டாடிய மக்கள்

 
bhogi

தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

bhogi

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.  பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையில் இருந்து தான் பொங்கல் விழா களைக்கட்டுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதை நினைவூட்டும் வகையில் வேளாண்மையை தமிழர்களின் முதன்மைத் தொழிலாக வைத்து போகி பண்டிகை சுத்தம் செய்யும் விழாவாக மட்டுமின்றி சுகாதாரம் பேணும் விழாவாகவும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.  பழைய உடைகள் , பொருட்களை தீயில் இட்டு அழித்துவிட்டு புதியவைகளை ஏற்கும் நாளாக போகி பண்டிகை இருந்து வருகிறது.

bhogi

இந்நிலையில் தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும்,  புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை மக்கள் இன்று கொண்டாடுகின்றனர்.  சிறுவர்கள் தெருக்களில் மேலும் அடித்து உற்சாகமாக போகி பண்டிகையை கொண்டாடினர்.