நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி!!

 
dpi building

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

எம்பிபிஎஸ்,  பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட்  நுழைவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.18 லட்சத்து 72 ஆயிரத்து  343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் 17 லட்சத்தில் 78 ஆயிரத்து 725 பேர் தேர்வு எழுதினர்.தமிழ் ஆங்கிலம் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதிய நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வை எதிர் கொண்டனர். நீட் தேர்வில் ராஜஸ்தான் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி 715 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் .நீட் தேர்வில் உத்தரபிரதேசம் ,மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரைதிருதேவ் விநாயகா என்ற மாணவன் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடமும் இந்திய அளவில் 30 வது இடத்தையும் பிடித்துள்ளார். அதேபோல் மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று 43 ஆவது இடத்தை பிடித்துள்ளார். 
 

neet

இந்நிலையில் நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறித்த விவரங்ளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது . அரசுப்பள்ளி மாணவர்களில் நீட் தேர்வுக்கு 17,972 பேர் விண்ண ப்பித்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 4,447 (35%) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

neet

குறைந்த பட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7% பேர் மட்டுமே தேர்ச்சி  அடைந்துள்ளனர். விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

neet pg

கடந்த 2021-ம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் தேர்வு எழுதிய 8,061 அரசுப்பள்ளி மாணவர்களில் 1,957 பேர் தேர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.