10வது முறையாக ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு..

 
 ரவிச்சந்திரன்

சென்னை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வந்த ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்   கைதான 7 பேர்களில் ஒருவர் ரவிச்சந்திரன். சிறை தண்டனை பெற்று   மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க கோரி ரவிச்சந்திரனின் தாயார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மனு அளித்திருந்தார்.  இதன் பின்னர் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் பரோல் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.  நீதிமன்றம் கொடுத்த பரிசீலனையின் அடிப்படையில் தமிழக அரசு ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்கியது. 

 ரவிச்சந்திரன்

கடந்த  ஆண்டு  (2021) நவம்பர் 11ம் தேதி மாலை, பல்வேறு நிபந்தனைகளுடன்  ரவிச்சந்திரன் பரோலில் வெளிவந்தார்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்ப நாயக்கர் பட்டினத்தில் அவரது தாயார் ராஜேஸ்வரியுடன் அவர் வசித்து வருகிறார்.  இந்நிலையில்  அவரது தாயார் ராஜேஸ்வரியை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதால்  பரோலை  நீட்டிக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் முதல்வரிடம் மனு அளித்தனர்.

ரவிச்சந்திரன் - ராஜிவ்காந்தி கொலை வழக்கு

அவ்வாறாக ஒவ்வொரு மாதமும் பரோல் முடியும்போது அவரது குடும்பத்தினர்  கோரிக்கைக்கு ஏற்ப, பரோல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது 10வது முறையாக ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  அவரது பரோல் நாளை மருந் ஆளுடன் முடிவடைய  உள்ள இலையில், மேலும் 30 நாட்களுக்கு கூடுதலாக பரோலை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.