#BREAKING கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்!!

 
tn

கள்ளக்குறிச்சி மாணவி உடலை  பெற்றுக் கொள்வதாக பெற்றோர் சம்மதம்  தெரிவித்துள்ளனர். 

Madras Court

 

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது . உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முறையீடு செய்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்க வந்தது.  சம்பந்தப்பட்ட பள்ளியில் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? உடல் எப்போது வழங்கப்படும் என மாணவியின் தந்தை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார் .

tn

அத்துடன் மாணவியின் மரணத்தில் சிலர் ஆதாயம் தேடுகிறார்கள். அது உங்களுக்கு தெரியாமல் நடந்துள்ளது . என்ன நடந்தது என்று தெரியாமல் வாட்ஸ் அப் குரூப்பில் வதந்திகளை பரப்ப வேண்டாம் . உடலை பெற்றுக்கொண்டு கண்ணியமான முறையில் இறுதி சடங்கை நடத்துங்கள்.  அந்த ஆன்மா இளைப்பாறட்டும் என்று நீதிபதி தரப்பில் கோரப்பட்டது . அத்துடன் நாளைக்குள் மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும்.  அப்படி இல்லையென்றால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்த நீதிபதி,  இது குறித்து 12 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

tn

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி உடலை பெற்றுக்கொள்வதாக பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.நாளை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் ஏற்றுக் கொள்வதாக பெற்றோர்கள் உறுதி அளித்துள்ளனர். நாளை காலை உடலை பெற்றுக் கொண்டு, மாலைக்குள் இறுதிச் சடங்கை முடிக்க நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் பெற்றோர் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தகுதியான தடயவியல் நிபுணர் கொண்டு மாணவியின் உடல் இரண்டாம் முறையாக மறுபிரேத  பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில் , இதற்கான அறிக்கைகளை பாண்டிச்சேரியின்  ஜிம்பர் மருத்துவமனை மூன்று பேர் கொண்ட குழு  ஆய்வு மேற்கொள்ளவும், ஒரு மாத காலத்திற்குள் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.