அரசு பேருந்துகளில் பார்சல் சேவை - தினசரி / மாத வாடகை விவரம் வெளியீடு..

 
அரசு பேருந்துகளில்  பார்சல் சேவை - தினசரி / மாத வாடகை விவரம் வெளியீடு..

 அரசு போக்குவரத்துக் கழக  பேருந்துகளில் பார்சல் சேவை ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான  தினசசி மற்றும் மாத வாடகை விவரங்கள் வெளியாகியுள்ளன.  

அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப் படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட போக்குவரத்துத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை, கடந்த 05.05.2022 அன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் பேருந்துகளை இயக்குகிறது. தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் விளைவிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் பிரசித்தி பெற்ற பொருட்கள் பிற ஊர்களுக்கு வியாபாரம் செய்திட ஏதுவாக, தற்போது லாரி மற்றும் பார்சல் சர்வீஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது.

அரசு பேருந்துகளில்  பார்சல் சேவை - தினசரி / மாத வாடகை விவரம் வெளியீடு..
 
இந்த நிலையில் லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவாக  பொருட்களை அனுப்பிட ஏதுவாக,   பேருந்தில் உள்ள சுமை பெட்டியை மாத வாடகை / தினசரி வாடகை செலுத்தி  பொதுமக்கள் உபயோகித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.   இத்திட்டம்  வருகிற ஆகஸ்ட் 8 ஆம் தேதி  முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான மாத மற்றும் தினசரி வாடகை விவரங்கள் வெளியாகியிருக்கிறது.  அதன்படி, “பிற ஊர்களிலில் இருந்து சென்னைக்கு 80 கிலோ எடை கொண்ட பொருட்களை அனுப்புவதற்கு தினசரி மற்றும் மாத கட்டணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் திருச்சி (331 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6,300, மதுரை (459 கிலோ மீட்டர்) தினசரி ரூ.300, மாதம் ரூ.9 ஆயிரம், கோவை (510 கிலோ மீட்டர்) தினசரி ரூ.330, மாதம் ரூ.9,900, சேலம் (341 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6,300 , நெல்லை (622 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11, 700 ஆக  வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

அரசு பேருந்துகளில்  பார்சல் சேவை - தினசரி / மாத வாடகை விவரம் வெளியீடு..

இதேபோல், தூத்துக்குடி (601 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11,700 , செங்கோட்டை (645 கிலோ மீட்டர்) தினசரி ரூ.390, மாதம் ரூ.11 ஆயிரத்து 700, நாகர்கோவில் (698 கிலோ மீட்டர்) தினசரி ரூ.420, மாதம் ரூ.12, 600. கன்னியாகுமரி (740 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, மார்த்தாண்டம் (728 கிலோ மீட்டர்) தினசரி ரூ.450, மாதம் ரூ.13 ஆயிரத்து 500, திண்டுக்கல் மற்றும் காரைக்குடி (428 கிலோ மீட்டர்) தினசரி ரூ.270, மாதம் ரூ.8 ஆயிரத்து 100, ஓசூர் (317 கிலோ மீட்டர்) தினசரி ரூ.210, மாதம் ரூ.6 ஆயிரத்து 300, நாகப்பட்டினம் (353 கிலோ மீட்டர்) தினசரி ரூ.240, மாதம் ரூ.7 ஆயிரத்து 200 கட்டணம்” நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக  அரசு விரைவுப் போக்குவரத்து கழக அதிகாரிகள்  தகவல் தெரிவித்தனர்.